Proizvod vam ne odgovara? Nema veze! Proizvode možete vratiti do 30 dana
S poklon bonom ne možete pogriješiti. Za poklon bon primatelj može odabrati bilo što iz naše ponude.
Do 30 dana za povrat
தமிழ் நாட்டின் பழைய வரலாறு, நாகரிகம், முதலியவற்றைத் தாய்மொழி வாயிலாக நம் இளைஞர்கட்கு நன்கு கற்பிக்க வேண்டுமென்னும் உணர்ச்சி இக்காலத்தில் இந்நாட்டுப் பெரியார் பலரிடை உண்டாகி யிருப்பது வெளிப்படை. இந்நிலையில்,
"குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தான்
புரண்டிட் டோடித் தரங்கநீர் அடைக்க லுற்ற"
அணில் போன்று, யானும், சோழர் சரித்திரத்தின் முதற் பகுதியாக இதனை எழுதலாயினேன்.
பத்து ஆண்டுகளின் முன் நாட்டுக்கோட்டை வணிகர்களின் ஊர் ஒன்றில் தமிழன்னையின் தவப் புதல்வராகிய மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே.சாமிநாதையர் அவர்கள் தலைமையின் கீழ் நடந்த பேரவையில் யான் சோழர் சரித்திரம் என்னும் பொருள் குறித்துப் பேச நேர்ந்தது. ஐயரவர்கள் முடிப்புரையில் அதனைச் சிறிது பாராட்டிப் பேசியதுடன், சென்னையிலிருந்து என் நண்பராகிய பண்டிதமணி திருவாளர் மு. கதிரேசச் செட்டியாரவர்கட்கு விடுத்த கடிதத்திலும் அதனைக் குறிப்பிட்டெழுதியிருந்தார்கள். தலைமை சான்ற புலமையுடைய பெரியாரொருவரின் மதிப்பிற்கு அச் சிற்றுரை இலக்காயினமையின், பின்பு அதனை எழுத்துருவிற் கொணரும் ஊக்கம் எனக்கு உளதாயிற்று. சிற்சில பகுதிகளைச் சில தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிட்டேன். அங்ஙனம் வெளியானவற்றைப் பின்பு செப்பஞ் செய்தும், முன் எழுதாதிருந்த பகுதிகளை எழுதிச் சேர்த்தும் இப்புத்தகத்தை வெளியிடலானேன்.
இதிற் கூறப்பெற்ற வேந்தர்களில் மனு, முசுகுந்தன், சிபி, காந்தன், தொடித்தோட் செம்பியன் என்போர் கால வரையறைக்கு உட்படாதோராவர். அவருள்ளும் முசுகுந்தனானவன் சரித்திரக் காரர்க்கு முற்றிலும் புறம்பான பழம்பிறப்பு, வானவர், அவுணர் என்னும் செய்திகளுடன் தொடர்புடையனாகின்றான்.
Dobar dan! Ja sam Libroamiko, vaš književni savjetnik.
Kako vam mogu pomoći?